தென்னம் தோப்புகளை தாக்கும் வெள்ளை ஈ -11 மாவட்டங்களுக்கு பரவியது
Colombo
Gampaha
Sri Lanka
Sri Lankan Peoples
By Sumithiran
தென்னம் தோப்புகளை தாக்கும் வெள்ளை ஈ
தென்னை சாகுபடிக்கு தீங்கு விளைவிக்கும் வெள்ளை ஈ என்ற பூச்சி தற்போது 11 மாவட்டங்களில் பரவியுள்ளதாக தென்னை வள ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தப் பூச்சியின் தாக்கத்தினால் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சுமார் 50 வீதமான தென்னந்தோப்புகள் சேதமடைந்துள்ளதாக அதன் பிரதிப் பணிப்பாளர் நயனி ஹெட்டியாராச்சிகே தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் கம்பஹாவை அடுத்து கேகாலை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.
ஒரேஞ்ச் தோட்டங்களுக்கும் ஆபத்து
வெள்ளை ஈக்கள் மஞ்சள் நிறத்தில் அதிகம் கவரப்பட்டு, ஒரேஞ்ச் தோட்டத்திற்கு அதிக சேதம் விளைவிப்பதாக தற்போதைய விசாரணைகள் உறுதி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்னந்தோப்புகளை வெள்ளை ஈக்களிடமிருந்து பாதுகாக்க ஏற்கனவே பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி