கனடாவில் பெரும் தொகை பணத்தை வென்ற அதிஷ்டசாலிகள் யார்
Lottery
Canada
By Sumithiran
பரிசைப் பெறாத அதிஷ்டசாலிகள்
கனடாவில் அண்மையில் இடம்பெற்ற லொத்தர் சீட்டிழுப்பில் 55 மில்லியன் மற்றும் 70 மில்லியன் டொலர் பரிசு வென்ற அதிஷ்டசாலிகள் இன்னமும் பரிசு பெறவில்லை என தெரிய வருகிறது.
கடந்த ஜூன் மாதம் 28ம் திகதி இடம்பெற்ற லொத்தர் சீட்டிழுப்பில் ஒரு வெற்றியாளர் 70 மில்லியன் டொலர்களை வென்றிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை மற்றுமொரு அதிஷ்டசாலி 55 மில்லின் டொலர்களை வென்றுள்ளார்.
தேடப்படும் அதிஷ்டசாலிகள்
எனினும் இந்த இரண்டு வெற்றியாளர்களும் இதுவரையில் தங்களது பரிசுக்காக உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிஷ்டசாலிகள் யார் என தேடப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு வெற்றிப் பரிசுத் தொகையை எவரும் உரிமை கோரத் தவறினால் அது எதிர்கால வெற்றியாளர்களுக்கு போனஸ் தொகையாகவும், லொத்தர் சீட்டு மேம்படுத்தல் நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
