தேரரின் வாகனம் தொடர்பில் யார் சொல்வது உண்மை
Colombo
Murutthettuwe Ananda Thero
By Sumithiran
முருத்தெட்டுவே தேரருக்குச் சொந்தமான வாகனம்
முருத்தெட்டுவே தேரருக்குச் சொந்தமான சூப்பர் V8 வாகனம் பற்றியே இந்த நாட்களில் அதிகம் பேசப்படுகிறது.
முதலில் முருத்தெட்டுவே தேரர், இந்த வாகனத்தை மன்னப்பெரும தனக்கு வழங்கியதாகவும், அந்த வாகனத்தை கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பிரியங்கா ஜயசேகர எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்தார்.
எந்த தொடர்பும் இல்லை
ஆனால், இந்த மாற்றங்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மன்னப்பெரும பின்னர் கூறினார்.
யார் சொல்வது உண்மை
இதேவேளை, இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாநகர சபை உறுப்பினர் செல்வி பிரியங்கா ஜயசேகரவும் தான் வாகனத்தை எடுத்து சென்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளார்.
அப்படியென்றால் வாகனம் தொடர்பாக தெரிவிக்கப்படும் இந்த விடயங்களில் யார் சொல்வது உண்மை என கொழும்பு ஊடகங்கள் கேள்வியெழுப்புகின்றன.
