சத்தியாக்கிரக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த விமல்!
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட தொடர்ச்சியான சத்தியாக்கிரகம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
தரம் 6 தொடர்பான புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்துவது அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்ததை அடுத்து, விமல் வீரவன்ச இவ்வாறு சத்தியாக்கிரகத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.
கல்வி சீர்திருத்தம்
புதிய கல்வி சீர்திருத்த செயல்முறையை உடனடியாக மீளப் பெற வேண்டும் என்றும், பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் கோரி இந்த சத்தியாக்கிரகம் நேற்று தொடங்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில், 6 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களை மறுஆய்வு செய்து 2027 ஆம் ஆண்டு தொடங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இருப்பினும், 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்கள் இந்த ஆண்டும் தொடரும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |