விமல் வீரவன்ச மீது தாக்குதல் நடத்த முயற்சி (காணொலி)
Colombo
Wimal Weerawansa
Sri Lanka
Sri Lanka Anti-Govt Protest
By Sumithiran
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச மீது நுகேகொட பிரதேசத்தில் வைத்து தாக்தல் நடத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரலவின் நுகேகொட ஜூபிலி கன்வான பிரதேசத்தில் உள்ள அலுவலகத்தில் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடலில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மீது சிலர் தாக்குதல் நடத்த முற்பட்டதையடுத்து அவர் வாகனத்தில் ஏறி சென்றுள்ளார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி