சிறிலங்கா போர் குற்றங்கள்! கோட்டாவை சிக்கவைக்கும் சாட்சி தயார்!
இலங்கை உட்பட்ட சில நாடுகளில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்குரிய பொறுப்புக்கூறல் திட்டங்களுக்கு அமெரிக்காவால் வழங்கப்படும் நிதியுதவியை வெட்டும் பரிந்துரைகள் குறித்த விரிவான ஆய்வுகள் தற்போது வோசிங்ரனில் நடைபெற்று வருகின்றன.
இந்தவிடயம், தொடர்பான இறுதி முடிவுகள் அடுத்தமாதம் வருமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஐ.நா மனித உரிமைப்பேரவை ஆணையாளர் வோல்கர் ரக்கின் இலங்கைப்பயணம் முடிவடைந்த கையுடன் வெள்ளை மாளிகையில் ரஸல் வோட் தலைமையில் இயங்கும் பாதீட்டு முகாமைத்துவ பணியகம் இந்த நிதிவெட்டுப் பரிந்துரையை முன்வைத்திருந்தது.
இந்தவிடயம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கடந்த 11 திகதி சமர்ப்பித்த அறிக்கையிடலில் இலங்கை உட்பட்ட சில நாடுகளின் பொறுப்புக்கூறல் திட்டங்கள் தொடர வேண்டும் என்ற கருத்து பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலிமை மூலம் அமைதி என்;ற அமெரிக்காவின் தற்போதைய வெளியுறவுக் கொள்கைக்கு பக்கவாட்டாக இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்குரிய பொறுப்புக்கூறல் அவசியம் எனவும் ராஜாங்கத்திணைக்களம் கருதுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விடயங்களை தாங்கிவருகிறது இன்றைய செய்திவீச்சு...

