விலாசம் கேட்பது போல் வீட்டுக்குள் நுழைந்து பெண்ணின் தங்க சங்கிலி அறுப்பு
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Kiruththikan
கிளிநொச்சி திருவையாறு பகுதியில் உள்ள வீடொன்றிக்குள் நுழைந்த நபர் வீட்டில் இருந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்து சென்றுள்ளார்.
வீட்டுக்குள் நுழைந்த நபர் வீட்டில் இருந்த பெண்ணிடம் விலாசம் ஒன்றை காண்பித்து விசாரித்துள்ளார்.
பின்னர் வீட்டில் இருந்து வெளியேறுவது போல் சென்று விட்டு பின்னர் திரும்பி வந்து அந்த பெண் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை அறுத்துக் கொண்டு சென்றுள்ளார்.
மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட பெண்
அந்த பெண் தங்க சங்கிலியை அறுக்க விடாது தடுத்த நிலையில் பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

