மாண்டஸின் தாக்கம் - தென்னிலங்கை உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் தீவிர நிலை!
இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட சில இடங்களில் காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் காற்றின் தரச் சுட்டெண் 157 ஆக பதிவாகியுள்ளதுடன் சில பகுதிகளில் 190ஐ விட அதிகமாக பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையில் பல வருடங்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் வளிமண்டலத்தில் அதிகளவான மாசு படிந்திருப்பதாக இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
புதிய கருவிகள்
அத்துடன், யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் காற்றின் தர சுட்டெணை அளவிடும் புதிய கருவிகளை நிறுவுவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
காற்று மாசுபாடு சுகாதார ரீதியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதால் மக்கள் கவனமாக செயற்பட வேண்டுமென அந்த சபை மேலும் வலியுறுத்தியுள்ளது.
அறிவுறுத்தல்
இதேவேளை, ஆரோக்கியமற்ற அல்லது சிவப்பு எச்சரிக்கை வலயத்தில் காற்றின் தர சுட்டெண் இருக்கும் பட்சத்தில் மக்கள் வெளியில் செல்வதை இயலுமான வரை குறைத்துக் கொள்ள வேண்டுமெனவும் சுவாசிப்பதில் சிக்கல் இருப்பவர்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா
