ஊடக சுதந்திரத்திற்கான சர்வதேச நாள் இன்று..! (காணொளி)
சுதந்திரம் என்பது ஒவ்வொரு உயிரிக்கும் கிடைக்கவேண்டிய மறுக்கப்படமுடியாத ஒரு உரிமையாகும் .
அதுமறுக்கப்படுகின்றவிடத்து தனக்கான சுதந்திரத்திற்காக இந்த உலகின் ஒவ்வொரு உயிரியும் போராக்கொண்டிருக்கிறது அந்த பட்டியலில் மனித இனத்தின் சுதந்திரத்தின் மீதான போராட்டம் என்பது தனித்துவங்கள் நிறைந்ததாகும் .
உலகின் சில நாடுகளைப்பொறுத்தவரை ஏனைய உயிரிக்களைவிட மனித சுதந்திரமென்பது பாரிய அடக்குமுறைகளுக்குள்ளகி வருகிறது அப்படியான அடக்குமுறைகளை உலக கண்களுக்கு பகிரங்கப்படுத்துகின்ற மிக காத்திரமான பணிகளை ஆற்றிவருகின்ற பத்திரிகைகள் கூட அனேகமான நாடுகளில் அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறைக்குள் அகப்பட்டு தமது சுயாதீனத்தை வெளிப்படுத்த இயலாத நிலையினை கொண்டிருக்கின்றன .
அந்த வகையிலாக மறுக்கப்படும் பத்திரிகைகளுக்கான சயாதீனத்தை நிறுவ வேண்டும் என்பதற்காக வருடா வருடம் பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது .இன்று மே 03 ம் திகதி உலக பத்திரிகை சுதந்திர தினம் இன்றாகும்.
இன்றைய நாளில் சுதந்திர ஊடகத்திற்காக உயிர்நீத்த அத்தனை ஊடக கனவான்களையும் ஈழத்தமிழர்களின் வரலாற்று வலிகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் Ibc தமிழ் வானொலி நினைவேந்துகிறது
