இங்கிலாந்தில் இலங்கையரின் மோசமான செயல்
Sri Lanka
Sri Lankan Peoples
United Kingdom
England
By Sumithiran
இங்கிலாந்தின் மென்சஸ்டரில் தனது மனைவியின் தலைமுடியை மொட்டையடித்து, அவரை தாக்கியதாக கூறப்படும் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
45 வயதான இந்த இலங்கையரும் அவரது மனைவியும் 2004ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்ற நிலையில் 2007ஆம் ஆண்டு மென்சஸ்டரில் குடியேறியதாக கூறப்படுகின்றது.
மனைவியை கொடுமைப்படுத்தி
அங்கு சென்றது முதலே இலங்கையர், தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததாக நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மனைவி தொழில் செய்து வந்தபோதும், கணவரான இலங்கையர் தொழில்களில் ஈடுபடவில்லை என கூறப்படுகின்றது.
இந்தநிலையில், தீய பழக்கங்களில் இருந்தும் மோசமான நண்பர்களிடம் இருந்தும் கணவரை காப்பாற்றும் முயற்சியின்போதே இலங்கைப் பெண், அவரது கணவரால் சித்திரவதைகளுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி