தொடருந்துடன் மோதி விபத்து - பரிதாபமாக உயிரிழந்த 25 வயது இளைஞன்
Sri Lanka Police
Sri Lanka Railways
Accident
Death
Railways
By pavan
சித்தாண்டி – முறக்கொட்டான்சேனை தேவபுரம் பகுதியில் தொடருந்துடன் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு (11) சென்ற தொடருந்தில் மோதியே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் சித்தாண்டி – 1, அலைமகள் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய சிவகுமார் குவேந்திரன் என என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
பிரேத பரிசோதனை
உயிரிழந்துள்ள இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி