எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் - வவுனியாவில் நடந்த சம்பவம்
Sri Lanka Police
Vavuniya
By Beulah
வவுனியா காத்தார் சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் ஒன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(28) புதன்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞரின் பெற்றோர் காலை வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியிருந்த போது இளைஞர் வீட்டின் பின்புறத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
23 வயது இளைஞன் உயிரிழப்பு
சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதான அயந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் இன்று காலை தொழிலிற்கு சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
