15 ஆயிரம் பேரின் மகிழ்ச்சியை பறித்த இளைஞர்கள் (படங்கள்)
புத்தளம் இஜிதும விளையாட்டரங்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது இளைஞர்கள் குழுவொன்று மோதலில் ஈடுபட்டதால், ஏற்கனவே நடாத்துவதற்கு தயார்படுத்தப்பட்டிருந்த ஏனைய அனைத்து போட்டிகளையும் ஏற்பாட்டாளர்கள் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் இஜிதுமா மைதானத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஏனைய போட்டிகளை காண வந்திருந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெரும் பதற்றத்துடன் திரும்பிச் செல்ல நேரிட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐந்து வருடங்களுக்கு பின்னரான ரம்ஜான் பண்டிகை
5 ஆண்டுகளுக்கு பிறகு ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் வகையில் இந்த மோட்டார் சைக்கிள், மிதிவண்டி, முச்சக்கரவண்டி போட்டிகள் நடத்தப்பட்டு, இந்த பந்தயத்தை பார்வையாளர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், சிலரால் போட்டியை சீர்குலைக்கும் வகையில் இளைஞர்கள் பாதையின் நடுவே புகுந்தனர்.
இவ்வாறு இளைஞர்கள் சென்றதை யாராலும் தடுக்க முடியவில்லை, ஏற்கனவே 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாதையின் நடுவே புகுந்ததை காண முடிந்தது.
நிகழ்வுகள் இரத்து
இந்த பந்தயங்களுக்கு காவல்துறையினரோ அல்லது ஏனைய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பையோ ஏற்பாட்டாளர்கள் கோரவில்லை எனவும் கூறப்படுகிறது.
ஆக்ரோஷமாக நடந்து கொண்ட இளைஞர்களை கட்டுப்படுத்த முடியாமல் பந்தயங்களை நிறுத்தவும், எஞ்சிய நிகழ்வுகளை இரத்து செய்யவும் ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்திருந்தனர்.
அரசியல்வாதி,அரச அதிகாரி முன்னிலையில்
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் ஆகியோர் போட்டிகளைக் காண வந்திருந்தனர். இருவரும் பிரதான மேடையில் இருந்தபோது, இளைஞர்கள் சண்டையில் ஈடுபட்டதைக் காண முடிந்தது.




