சுவீடன் மன்னரை சந்தித்தார் உக்ரைன் அதிபர்
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் முதல் பெண்மணி ஓலேனா ஜெலென்ஸ்கா இருவரும் சுவீடன் மன்னர் கார்ல் XVI குஸ்டாஃப் மற்றும் ராணி சில்வியா ஆகியோரை சந்தித்தனர்.
ஸ்டென்ஹம்மர் அரண்மனையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
எனினும் இந்த சந்திப்பு தொடர்பான எந்த விபரங்களையும் சுவீடன் றோயல் அரண்மனை பகிர்ந்து கொள்ளவில்லை.
ஒருமணிநேரம் இடம்பெற்ற சந்திப்பு
இந்த சந்திப்பு ஒருமணிநேரம் இடம்பெற்றதாக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் 19, சனிக்கிழமை காலை, உக்ரைனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, முதல் பெண்மணி ஓலேனா ஜெலென்ஸ்காவும் சுவீடனுக்கு சென்றனர். அவர்கள் சுவீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சனை சந்தித்தனர்.
உக்ரைனும் சுவீடனும் இணைந்து CV-90 காலாட்படை சண்டை வாகனங்களை தயாரிக்க ஒத்துக் கொண்டன
ஜெலென்ஸ்கி சுவீடன் நாடாளுமன்ற சபாநாயகர் Andreas Norlén மற்றும் நாடாளுமன்ற கட்சிகளின் தலைவர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.