07 வயது சிறுமி மாயம் - பதட்டத்தில் தந்தை
7 வயதுடைய தனது மகளான சிறுமியை நேற்று (15) இரவிலிருந்து காணவில்லை என குறித்த சிறுமியின் தந்தை நெலுவ காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
நெலுவ மஹகந்தவத்த பிரதேசத்தில் வசிக்கும் விக்ரமகே டெராஷா என்ற சிறுமியே காணாமற்போனவராவார்.
பெற்றோர் விவாகரத்து
இந்த சிறுமியின் பெற்றோர் விவாகரத்து பெற்றவர்களாவர். இந்நிலையில் சிறுமியின் தாயின் தங்கை மற்றும் அவருடன் ஒருவரும் நேற்று மாலை சிறுமியைப் பார்க்க வந்துள்ளனர்.
தான் தேயிலை தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, இரவு 7.10 மணியளவில் மகள் காணாமல் போனதை அறிந்ததாகவும் சிறுமியின் சித்தி அவரைக் அழைத்துக்கொண்டு சென்றிருக்கலாம் என தான் சந்தேகிப்பதாகவும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
சிறுமியின் தாய் செவணகல பிரதேசத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
சம்பவம் தொடர்பில் நெலுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
