ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய முயற்சி! வஜிர விடுத்துள்ள அழைப்பு
இலங்கையின் அனைத்து அரசியல் தலைவர்களும் ஒரே மேடையில் ஒன்று கூடிச் செயல்பட்டு, நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவும், இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுவதைக் கட்டுப்படுத்தவும் வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய அவர், இந்த மேடை வெறுப்பு, கோபம், பொறாமை, பேராசை ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்றும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த முயற்சிக்கு தலைமை ஏற்கலாம் என்றும் பரிந்துரைத்தார்.
இளைஞர்களுக்கான ஒரு சந்திப்பில் உரையாற்றிய அவர், நாட்டின் சுதந்திரத்தை நினைவூட்டியதோடு, தேசிய தலைமைத்துவம் நாட்டின் எதிர்கால நலனுக்காக ஒற்றுமையை முன்னிலைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
புதிய முயற்சிகள்
மேலும், ஐக்கிய தேசியக் கட்சி (UNP) இளைஞர்களுடன் இணைந்து, கட்சியின் மறுசீரமைப்பு உள்ளிட்ட புதிய முயற்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களைப் பற்றியும் அவர் கவலை வெளியிட்டார். பலருக்கும் தங்கள் எண்ணங்களை பகிர யாரும் இல்லை, அதிக நேரத்தை கைப்பேசிகளில் செலவழிக்கிறார்கள் எனவும் அபேவர்தன கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
