அல்லைப்பிட்டியில் சுடப்பட்ட வாகன பயணம்! முன்னிரவில் நடந்ததை விளக்கும் ஊரவர்
அல்லைப்பிட்டி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பேசுபொருளாகியிருந்தது.
இச்சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் எமது ஐ.பி.சி தமிழ் ஊடகம் பொதுமக்களிடம் அவர்களின் நிலைப்பாட்டை கேட்டறிய சென்ற போது, பலர் இளைஞர்களின் பாதுகாப்பு குறித்து தீவிர கவலை வெளியிட்டனர்.
இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டத்தின் ஒழுங்குகள் தொடர்பிலும் விமர்சித்திருந்தனர்.
இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் இருக்க சமூக மட்டத்தில், பெற்றோர்களினுடைய ஈடுபாடுகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தின் பின்னணி மக்கள் மத்தியில் பல கருத்துக்களையும் விமர்சனங்களையும் சுமந்துள்ள நிலையில் அது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
கொழும்பில் பயங்கரம்: வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சட்டத்தரணி மற்றும் மனைவி - களத்தில் குதிக்கும் CID
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |