தாயின் காதலனால் சிறுமி படுகொலை! விசாரணைகள் தீவிரம்
ஹோமாகம, மாகம்மன சமகி மாவத்தை பகுதியில் தாயின் காதலனால் கொடூரமாக தாக்கப்பட்டு 3 வயது சிறுமி கொலைசெய்யப்பட்டுள்ளதாக மத்தேகொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மாகம்மன சமகி மாவத்தை பகுதியைச் சேர்ந்த சிறுமியே கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
சம்பவதினமான இன்று சிறுமியின் தாயின் காதலன், சிறுமியை கொடூரமாக தாக்கியுள்ள நிலையில் சுகயீனமுற்ற சிறுமி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதனையடுத்து சிறுமியின் தாயின் காதலன் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார். இதேவேளை, உயிரிழந்த சிறுமியின் தாய் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்தேகொடை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |