இரட்டை குடியுரிமை பெற்ற எம்.பிக்களின் பதவி பறிபோகுமா -அமைச்சர் வெளியிட்ட தகவல்
Parliament of Sri Lanka
Dr Wijeyadasa Rajapakshe
Sri Lanka
By Sumithiran
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கூற்றுப்படி, 22வது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு வந்தால் தமது எம்பி பதவிகளைத் தக்கவைக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் கூற்றுப்படி, தற்போதைய நாடாளுமன்றில் இரட்டைக் குடியுரிமை கொண்ட சுமார் பத்து எம்.பி.க்கள் உள்ளனர்.
இரட்டை குடியுரிமை கொண்ட் பத்து எம்பிக்கள்
ஒரு சிலரைத் தவிர, அந்த எம்.பி.க்கள் யார் என்பது தனக்குத் தெரியாது என்று அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கூறினார்.
முக்கியமான தருணமாக அமையும்
சிறிய திருத்தங்களுடன் இந்த திருத்தத்தை அங்கீகரித்தமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், நாட்டின் ஜனநாயகத்திற்கு இது ஒரு முக்கியமான தருணமாக அமையும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
