மகிந்த பதவி விலகாவிட்டால் ---ஆளும் தரப்பு பின்வரிசை எம்பிக்கள் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
அனைத்துக் கட்சி ஆட்சியை அமைக்கும் வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகாவிட்டால் பத்து பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவாக இணைந்து கடுமையான முடிவை எடுக்க நேரிடுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதம அமைப்பாளருமான லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.
பண்டாரகமவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாமும் பிரதமருடன் கலந்துரையாடினோம், நாட்டின் சார்பில் எந்த நேரத்திலும் முடிவெடுக்கத் தயார் என்ற செய்தியை அவர் எமக்கு வழங்கினார். எவ்வாறாயினும், இந்த முடிவை எடுக்க பிரதமர் அனுமதிக்கப்படுவாரா இல்லையா என்பதில் எங்கள் குழு உறுதி அற்றதாக உள்ளது. அப்படிச் செய்தால், அவர்கள் திருடனைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத்தானே செய்கிறார்கள்.
இது தற்காப்புக்கான நேரம் அல்ல, நாட்டைக் காக்க வேண்டிய நேரம். எனவே அரச தலைவர் மற்றும் பிரதமர் இந்த தீர்மானங்களை எடுப்பதற்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்கி நாட்டை கட்டியெழுப்புவதற்கு இடமளிக்குமாறு அனைவரையும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நாங்கள் அதை அனுமதிக்கவில்லை என்றால், நாங்கள் பத்து பேரும் கடுமையான முடிவை எடுக்க வேண்டியிருக்கும். ”
இந்த எம்.பி.க்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற முயற்சித்தால், அரசாங்கம் தனிப்பெரும்பான்மையை இழக்கும் வாய்ப்பு உள்ளது.
