உலகின் பழமையான நகரங்களை பற்றி அறிந்துள்ளீர்களா..!
பழமை என்றாலே அதனில் நிச்சயமாக புதுமையான பல விடயங்கள் காணப்படவே செய்கின்றன.
அவ்வகையில், உலகின் 10 பழமையான நகரங்களைப் பற்றிதான் இப்போது பார்க்கப் போகிறோம். இங்கு பழங்காலம் தொட்டே மக்கள் தொடர்ந்து வசித்து வருகிறார்கள்.
11,000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வசிக்கத் தொடங்கிய சிரியாவின் நெருக்கடி மிகுந்த டமாஸ்கஸ் நகரம் முதல் 5,000 வருடம் பழமையான இந்தியாவின் வாரணாசி வரை என பல அற்புதமான பண்டைய நகரங்களை அதன் வசீகரமான கதைகளையும் இப்பதிவின் வாயிலாக காணலாம்.
சிடான், லெபனான்
6,000 வருடம் பழமையான சிடான் ஒரு துறைமுக நகரமாகும். பெய்ரூட் நகரிலிருந்து 25 மைல் தொலைவில் உள்ள இந்நகரத்தில் கிபி 4,000 ஆண்டுகளிலேயே மக்கள் வசிக்கத் தொடங்கிவிட்டனர்.
வரலாற்று முகியத்துவமும் கலாச்சார மரபும் கொண்ட இந்நகரம் லெபனான் நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகும்.
அர்கோஸ், கிரீஸ்
கிரீஸ் நாட்டிலுள்ள 7,000 வருடம் பழமையான அர்கோஸ் நகரம் சில குறிப்பிடத்தகுந்த பெருமைகளை பெற்றுள்ளது.
உலகளவில் பார்த்தோமென்றால், பழங்காலம் தொட்டே மக்கள் தொடர்ந்து வசித்து வரக் கூடிய பழமையான நகரங்களில் ஒன்றாகவும் ஐரோப்பாவின் பழமையான நகரமாகவும் அர்கோஸ் திகழ்கிறது.
பழங்கால வரலாற்றை பறைசாற்றும் பல நினைவுச் சின்னங்கள் இங்குள்ளன. வரலாற்று சிறப்புமிக்க இந்த பழங்கால நகரத்தில் தற்போது ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகிறார்கள்.
சூஸா, ஈரான்
6,300 வருடம் பழமையான சூஸன் நகரம், ஈரானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. கிபி 4000 காலம் தொட்டே இங்கு நகர கட்டுமானங்கள் இருந்ததாக அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள் கூறுகின்றன.
இதிலிருந்தே இந்நகரத்தின் பழமையையும் வரலாற்று முக்கியத்துவத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
ப்லோடிவ், பல்கேரியா
பல்கேரியாவின் இரண்டாவது பெரிய நகரமாக கருதப்படும் ப்லோடிவ், 6,000 வருடம் பழமையானது.
ஐரோப்பாவின் பழையான நகரங்களில் ஒன்றாக திகழும் ப்லோடிவ், இக்கண்டத்தின் பழமையான வரலாற்றிற்கும் பாரம்பரியத்திற்கும் வாழும் சாட்சியாக திகழ்கிறது.
வாரனாசி, இந்தியா
பெனாரஸ் அல்லது காசி என அழைக்கப்படும் வாரனாசி 5,000 வருடம் பழமையான நகரமாகும். உலகில் பழங்காலம் தொட்டே மக்கள் வசித்து வரும் நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்நகரத்தை 11-ம் நூற்றாண்டில் விஷ்னு, பிரம்மனோடு சேர்ந்து சிவ பெருமானை தோற்றுவித்ததாக நம்பப்படுகிறது.
பைப்ளோஸ், லெபனான்
லெபனான் நாட்டின் மவுண்ட் கவர்னரேட் பகுதியில் இருக்கும் இந்நகரம் 7,000 வருடங்கள் பழமையானது.
பழமையான மற்றும் பெரிய நகரமாக திகழும் இங்கு முதன் முதலில் 8800 மற்றும் 7000 ஆண்டுகளுக்கு இடையே மக்கள் வசிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் 5000 ஆண்டுகளிலிருந்து மக்கள் இந்நகரத்தில் தொடர்ந்து வசித்து வருகிறார்கள்.
டமாஸ்கஸ், சிரியா
11,000 ஆண்டுகள் பழமையான டமாஸ்கஸ் நகரத்தில், இயேசு கிறிஸ்துக்கு முன்பான ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மக்கள் வசிக்க தொடங்கியதாக வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இன்று இரண்டு மில்லியனுக்கும் மேல் மக்கள் வசிக்கும் மெட்ரோ நகரமாக மாற்றமடைந்துள்ளது டமாஸ்கஸ்.
ஏதென்ஸ், கிரீஸ்
7,000 வருட பழமையான ஏதென்ஸ் நகரத்தில், 11 முதல் 17-ம் நூற்றாண்டிற்கு முன்பே மக்கள் வசிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
கிரீஸ் நாட்டின் தலைநகராகவும் அந்நாட்டின் மிகப்பெரிய நகரமாகவும் திகழும் ஏதென்ஸ், மனித நாகரிகத்தின் மையமாக இருக்கிறது.
எர்பில், ஈராக் குர்திஸ்தான்
6,000 வருடங்களுக்கு முன்பே எர்பில் நகரத்தில் மக்கள் வசிக்கத் தொடங்கிவிட்டதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பண்டைய நகரம் இன்று பல நவீன வசதிகளையும் பழங்கால இடங்களையும் கொண்ட கலவையான நகரமாக இருக்கிறது.
அலெப்போ, சிரியா
ஹலாப் என அழைக்கப்படும் அலெப்போ நகரத்தில் 8,000 வருடங்களுக்கு முன்பே மக்கள் வசிக்க தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.