அவுஸ்திரேலியா துப்பாக்கிச் சூட்டில்16 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை
புதிய இணைப்பு
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி (Bondi) கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு குழந்தை உட்பட 16 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம் குறித்த பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், தாக்குதல் நடத்திய 2 பேர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக குறித்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 12 பேர் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அவர்களில் துப்பாக்கிதாரி ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உயிரிழந்தவர்களில் துப்பாக்கிதாரியும் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து மிக மோசமாக காயமநை்த நிலையில் நான்கு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் இன்று (14) மதியம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரி உட்பட 12 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் சுமார் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் இருவர் காவல்துறை அதிகாரிகள் எனவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்
துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றையவர் காவல்துறையின் பிடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களைக் காட்டும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இந்த தாக்குதல் "சிட்னியின் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Images BBC
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



ஜே.விபியால் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படப்போகும் இறுதி பேரழிவு 2 மணி நேரம் முன்