வவுனியா சிறைச்சாலையில்10 சிறைக்கைதிகள் விடுதலை!
Sinhala and Tamil New Year
Vavuniya
Prison
By Laksi
வவுனியா (Vavuniya) சிறைச்சாலையில் புத்தாண்டை முன்னிட்டு 10 கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா அதிபரின் புத்தாண்டு கால விசேட பணிப்புரையின் படி சிறைச்சாலையில் தண்டனை பெற்று வந்த 10 சிறைக்கைதிகளே இன்று (13)காலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அபராதங்கள் இரத்து
சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளும் தண்டனையின் பாதியை நிறைவு செய்த கைதிகளுமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் செலுத்த வேண்டிய அபராதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
கைதிகளை விடுவிக்கும் இந்த நிகழ்வில் வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் அபயரத்தன, பிரதான சிறைச்சாலை பிரதானி புத்திக்க உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பங்குபற்றியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்