அநுராதபுரத்தில் விபத்து : 10 வயது சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழப்பு!
Sri Lanka Police
Anuradhapura
Sri Lanka Police Investigation
By Sathangani
அநுராதபுரம் - துருவில வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று (24) இரவு அநுராதபுரம் நகரத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தஹய்யாகம சுற்றுவட்ட வீதியில் இருந்து 55 வீடுகள் பகுதியை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (SLTB) பேருந்து ஒன்று, அதே திசையில் முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
காவல்துறையினர் விசாரணை
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அநுராதபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்