அயோத்தி ராமர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும் பிரம்மாண்ட ஊதுபத்தி(காணொளி)
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் நடைபெறும் கும்பாபிசேக நிகழ்வில் பயன்படுத்துவதற்காக விசேடமாக 108 அடி நீள ஊதுபத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 22ஆம் திகதி காலை அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிசேக நிகழ்வு நடைபெற உள்ளது. இதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஊதுபத்தி பயன்படுத்தப்பட உள்ளது.
50 கிலோமீட்டர் தூரத்திற்கு வாசனை
இது குஜராத் மாநிலம் வதோதராவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதுபத்தி 3,610 கிலோ எடையும், 108 அடி நீளமும், மூன்றரை அடி அகலமும் கொண்டது. சுமார் 6 மாத காலம் இந்த ஊதுபத்தியை தயாரிக்க செலவு செய்துள்ளனர். இதை பற்ற வைத்தால் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு வாசனை பரவும் என்கின்றனர்.
3400 கிலோ, 108 அடி ஊதுபத்தி அயோத்தி பயணம்.@Selvaraj_Crime pic.twitter.com/ja3lMgDJrH
— A Selvaraj (@Crime_Selvaraj) January 16, 2024
அதுமட்டுமன்றி ஒன்றரை மாதங்களுக்கு தொடர்ந்து எரிந்து வாசனையை அளிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
பிரம்மாண்ட பாரவூர்தி
இந்நிலையில் ஊதுபத்தியை வதோதராவில் இருந்து அயோத்திக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடங்கியுள்ளன.
இதற்காக பிரம்மாண்ட பாரவூர்தி வடிவமைக்கப்பட்டு, அதில் ஏற்றப்பட்டுள்ளது. இதை பத்திரமாக கொண்டு செல்லும் வகையில் நிர்வாகிகள் சிலர் ஊதுபத்தி ஏற்றி செல்லும் பாரவூர்தியில் பயணம் செய்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |