உக்ரைனுடனான போர் : ரஷ்ய வீரர்களின் விபரீத முடிவு தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் தொடங்கியதில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் – ரஷ்யா இடையே, 2022 பெப்ரவரியில் போர் தொடங்கியது. இரு தரப்பிடையேயான போர் நிறுத்தத்துக்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் நான்கரை ஆண்டுகளைக் கடந்து போர் தொடர்கிறது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
1,087 ரஷ்ய வீரர்கள் தற்கொலை
இந்நிலையில், ரஷ்ய அரசின் புள்ளியியல் துறை ரஷ்ய வீரர்கள் இறப்பை, இராணுவ உயிரிழப்புகள் மற்றும் வீரர்கள் தற்கொலை என இரு விதமாக வகைப்படுத்தி மறைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து, 1,087 ரஷ்ய வீரர்கள் தற்கொலை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில், 614 தற்கொலைகள் உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அந்நாட்டை ஒட்டியுள்ள ரஷ்ய பிராந்தியங்களில் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது-.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |