மஹர மற்றும் கம்பஹா பகுதிகளுக்கு 12 மணி நேர நீர் வெட்டு
Gampaha
Sri Lanka
Water
By Sathangani
மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை பகுதிகளில் 12 மணி நேர நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று (27) மாலை 7 மணி முதல் நாளை (28) காலை 7 மணி வரை குறித்த பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரை சேமித்து வைத்தல்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடைய நீர்க் குழாய்களை இடமாற்றம் செய்வதற்கான அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான அளவு நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி