பிரதமர் பதவி விவகாரத்தில் விஜித ஹேரத்தின் பதிலால் கிளம்பிய புதிய சர்ச்சை!
வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பிரதமராக நியமிக்கப்படுவார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரிமாற்றப்படும் கருத்துக்கள் குறித்து தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்த செய்தியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
ஊடக நிறுவனம் ஒன்றின் தலைவரின் மகளுடைய திருமணம், கடந்த வாரம் காலியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
ரணிலின் கருத்து
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், முன்னாள் அமைச்சர்கள் தலதா அதுகோரல மற்றும் வஜிர அபேவர்தன மற்றும் மேலும் பலர் அதே மேசையில் அமர்ந்துள்ளனர்.

இதன்போது முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை அப்பதவியிலிருந்து நீக்கியமை குறித்துப் பேச்சு எழுந்துள்ளது.
அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க பதில் வழங்கையில், "அதற்கு நான் பதிலளிக்கிறேன். நான் தலையிடச் செல்லவில்லை. அவர்கள் என்னுடன் விளையாட்டு தொடர்பான விடயங்களைப் பற்றி விவாதிக்கவில்லை.
அந்தப் பெண்மணிதான் எல்லாவற்றிலும் தலையிட்டார்," என்பதே முன்னாள் ஜனாதிபதியின் பதிலாக இருந்தது என கூறியுள்ளார்.
சர்வதேசத்தின் பார்வை
இந்த உரையாடலின் போது, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அங்கு வந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அருகில் அமர்ந்துள்ளார்.
அந்த மேசையில் இருந்த ஒரு பத்திரிகையாளர் வெளியுறவு அமைச்சரிடம், "நீங்கள் அடுத்த ஆண்டு பிரதமராகிவிடுவீர்கள் என்று கேள்விப்படுகிறேன்" என்று கேட்டுள்ளார்.
" இந்த வருடமே ஏன் கூடாது?" என்று அமைச்சர் புன்னகையுடன் பதிலளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில், அமெரிக்கத் தூதரகத்தின் 250வது தேசிய தினக் கொண்டாட்டங்களின் போது, பல தூதரகங்களின் அதிகாரிகளும், ஒரு மேற்கத்திய தூதரகத்தின் அதிகாரிகளும், எதிர்காலத்தில் அரசாங்கத்தில் பிரதமர் பதவிக்கான போட்டி உருவாகும் என்று ஊகித்துள்ளனர் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |