கொலை செய்யப்பட்ட பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சர்! விசாரணையில் வெளிவந்த தகவல்
பிரித்தானிய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் ஆன் விடெகோம்பின் உயிரிழப்பு குறித்து தீவிர விசாரணைகளை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் அவரது மரணம் கொலையாக சந்தேகிக்கப்படும் நிலையில், ஆன் விடெகோம்பின் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இறுதியாக வெளியாகிள ஒரு புதிய தகவலில், விடெகோம்ப் புதன்கிழமை மதியம் சுமார் 12.30 மணியளவில் தாக்கப்பட்டார் என்ற அனுமானத்தின் அடிப்படையில் விசாரணை அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டெடுக்கப்பட்ட உடல்
கடந்த வியாழக்கிழமை(09.07.2026) காலை 11.40 மணிக்கு, டெவோனின் ஹேட்டரில் உள்ள விடெகோம்பின் பங்களாவில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை தொடர்பாக கைது செய்யப்பட்ட 26 வயது இளைஞன், தற்போது எந்தக் குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்கப்பட்டார் என்றும் மேலும், அவர் இனி இந்த விசாரணையின் ஒரு பகுதியாக அவர் இருக்கபோவதில்லை என்றும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |