நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த பெண் கைதிகள் குறித்து வெளியான தகவல்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பெண் கைதிகளும் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய மொத்தம் 166 பெண் கைதிகள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதற்றமான சூழ்நிலை
இதன்படி, குறித்த பெண் கைதிகள் வாரியபொல, போகம்பரை, அங்குணுகொலபெலஸ்ஸ மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து சிறைச்சாலைக்குள் குழப்பமாக நடந்துகொண்ட பெண் கைதிகள் குழுவொன்று வாரியபொல சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது அனைத்து பெண் கைதிகளும் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |