அமெரிக்காவில் ட்ரம்பின் அனுமதி இல்லாமல் நடைமுறைக்கு வரும் சட்டம்!
அமெரிக்காவில் 21 ஆம் நூற்றாண்டு வீட்டுவசதிச் சட்டம் ரொனால்ட் ட்ரம்பின் கையொப்பம் இல்லாமலே நடைமுறைக்கு வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
21 ஆம் நூற்றாண்டு வீட்டுவசதிச் சட்டமானது வீடு வாங்குவோர், வாடகைக்கு குடியிருப்போர் மற்றும் வீடு கட்டுவோருக்கான மத்திய அரசின் கொள்கையில் செய்யப்பட்ட மிகப்பெரிய மாற்றமாகும்.
ரொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்ட சட்டமூலத்தில் கையெழுத்து இடாத காரணத்தினால் இந்த சட்டம் தற்போது தானாகவே நடைமுறைக்கு வரவுள்ளது.
தானாக நடைமுறைக்கு வரும் சட்டம்
"SAVE America Act" என்ற தேர்தல் சட்டத்தை வீட்டுவசதி சட்டத்துடன் சேர்க்க விரும்பியதால் அமெரிக்காவில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் நிறைவேறிய வீட்டுவசதி மசோதாவில் ரொனால்ட் ட்ரம்ப் கையெழுத்து இட மறுத்தார்.

ஆனால் அந்த "SAVE America Act" என்ற சட்டத்திற்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்த ட்ரம்ப் வீட்டு வசதி சட்டமூலத்தில் கையொப்பமிடவில்லை.
அமெரிக்க சட்டப்படி, ஜனாதிபதி ஒரு சட்டமூலத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டோ (Veto) செய்யாமல், கையெழுத்திடாமலும் இருந்தால், 10 நாட்கள் கழித்து அது தானாகவே சட்டமாகிவிடும்.
அதன்படி இந்த வீட்டுவசதி சட்டமூலம் சனிக்கிழமை நள்ளிரவு முதல் தானாகவே நடைமுறைக்கு வரவிருக்கிறது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |