மகாவலி கங்கையில் மூழ்கி 11 வயது சிறுவன் பலி!
திருகோணமலை மாவட்டத்தில் மகாவலி கங்கை ஆற்றில் மூழ்கி 11 வயதுடைய ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் மூதூர் காவல்துறைக்கு உட்பட்ட கங்குவேலி பகுதியில் இன்று சனிக்கிழமை(11) நடந்துள்ளது.
இதன்போது, சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனை
உயிரிழந்த சிறுவன் இன்று காலை தனது குடும்பத்தினருடன் ஆற்றங்கரைப் பகுதிக்கு சமையல் தேவைக்காகச் சென்றுள்ளார். இதன்போது, ஆற்றில் குளிப்பதற்காக சிறுவன் இறங்கிய நிலையில், எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சிறுவன் நீரில் மூழ்குவதைக் கண்டு குடும்பத்தினரும் அங்கிருந்தவர்களும் உடனடியாக அவரை மீட்கப் போராடியுள்ளனர்.ஆனால் சிறுவனை உயிருடன் மீட்க முடியாமல் போயுள்ளது.
இந்த நிலையில், நீண்ட தேடுதலின் பின்னர் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மூதூர் தள வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இச்சம்பவம் குறித்து மூதூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |