வெளிநாடுகளில் இருந்து இலங்கை தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தில் பாரிய வீழ்ச்சி
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தின் சதவீதத்தில் வீழ்ச்சி நிலை பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல்கள் மூலம் இலங்கை கடந்த ஜூன் மாதத்தில் 695 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த மே மாதத்தில் பெறப்பட்ட வெளிநாட்டு வருமானம் 847 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
வெளிநாட்டு வருவாய்
மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் வெளிநாட்டு பணவணுப்பல்கள் மூலம் பெறப்பட்ட வருவாயானது 152 மில்லியன் அமெரிக்க டொலர்களினால் கணிசமாகக் குறைந்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இதேவேளை, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டு வருவாய் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
எவ்வாறாயினும் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 23.2 சதவீத அதிகரிப்பைக் காட்டுகிறது.
அதேநேரம், 2026 ஜூன் மாதத்தில் இலங்கை சுற்றுலாத்துறை மூலம் 151.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாக ஈட்டியுள்ளது.
இருப்பினும், 2025 ஜூன் மாதத்திற்கான சுற்றுலா வருவாய் 169.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |