புளோரிடாவில் பல்கலைக்கழகக் கொண்டாட்டத்தில் பாரிய துப்பாக்கிச் சூடு!
அமெரிக்காவின் புளோரிடாவில் பாரிய துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் 6 சிறுவர்கள் உட்படக் குறைந்தபட்சம் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
புளோரிடா மாநிலத்திலுள்ள புளோரிடா ஏ & எம் பல்கலைக்கழகத்தின் (Florida A&M University) பாரம்பரிய ஹோம்கமிங் (Homecoming) கொண்டாட்ட வார இறுதி நாளில் கால்பந்து விளையாட்டு அரங்கிற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூடு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சம்பவ இடத்திற்கு விரைந்த டாலாஹாசி காவல் திணைக்களத்தின் (Tallahassee Police Department) அதிகாரிகள் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இச் சம்பவத்தில் காயமடைந்த 12 பேரில் 11 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஆறு பேர் முதியவர்கள் என்றும் மற்றும் ஆறு பேர் சிறுவர்கள் (சிறுவர்களில் 11 வயதுச் சிறுவனும் அடங்குவர்) என்றும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
காயமடைந்தவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள அதேவேளை, ஏனைய ஒன்பது பேர் சீரான நிலையிலுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழகப் போட்டியின் பின்னர் கூட்ட நெரிசல்மிக்க பெர்ரி வீதியில் (Perry Street) இடம்பெற்ற பார்ட்டி ஒன்றில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு மற்றும் கைக்கலப்பே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு வழிவகுத்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன.

இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த டாலாஹாசி காவல்துறை தலைமை அதிகாரி லாரன்ஸ் ரெவெல் (Lawrence Revell), சிறுவர்கள் இத் தாக்குதலில் காயமடைந்துள்ளது நெஞ்சை உலுக்கும் காரியமாகும் என வேதனை வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |