குளித்துக்கொண்டிருந்த 12 வயது மாணவனை இழுத்துச் சென்றது முதலை
கல்கிரியகம காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட மனேருவ பகுதியில் உள்ள வம்படுவெவ ஏரியில், முதலைத் தாக்குதலுக்கு உள்ளாகி 12 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மனேருவ மகா வித்தியாலயத்தில் 8-ஆம் வகுப்பில் பயிலும் குறித்த மாணவன், நேற்று(24) மாலை ஒரு பெண்ணுடன் ஏரிக்குக் குளிக்கச் சென்றிருந்தான். ஏரியில் குளிக்கும் இடத்திலுள்ள படிகளில் அவன் அமர்ந்திருந்தபோது, அங்கு மறைந்திருந்த முதலை ஒன்று திடீரென அவனைப் பிடித்து இழுத்துச் சென்றது.
சிறுவனின் சடலம்
நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு, அப்பகுதி மக்களால் சிறுவனின் சடலம் ஏரியிலிருந்து மீட்கப்பட்டது. இந்த ஏரியில் முதலைத் தாக்குதலால் உயிரிழக்கும் இரண்டாவது குழந்தை இதுவாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இதே வம்படுவெவ ஏரியில் முன்னதாக முதலைத் தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் தனது கையின் ஒரு பகுதியை இழந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து கல்கிரியகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |