தமிழர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் : அநுரவிடம் சுமந்திரன் விடுத்துள்ள கோரிக்கை
ஆட்சிக்கு வரும் போது புதிதாக ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவோம் என ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை யாழில் இலங்கை தமிழரசு கட்சியின் 75 ஆவது ஆண்டு இன்று (18) நினைவு கூரப்பட்ட நிலையில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கும்.
அதேவேளையிலே, அதை நிறைவேற்றுவதற்கான இராஜதந்திர நகர்வுகளை இந்தியா மேற்கொள்ளும்.
தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அன்றிலிருந்து இன்று வரை சமஷ்டி முறையிலான ஆட்சி முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கின்றனர்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |