13 இலங்கையின் சாபக்கேடு - முற்றாக இல்லாதொழிப்போம் - விமல், கம்மன்பில, வீரசேகர கூட்டாக சூளுரைப்பு!
"இலங்கைக்கு ஒரு சாபக்கேடாக 13 ம் திருத்த சட்டம் இருக்கின்றது, அதை 22 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இல்லாமல் ஆக்க வேண்டும்."
இவ்வாறு, நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, சரத் வீரசேகர, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாகக் கூறியுள்ளனர்.
13 ம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளிப்படுகின்ற சூழ்நிலையில், இவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
13 இலங்கையின் சாபக்கேடு
மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்கள்,
"13 ம் திருத்தத்தை காரணம் காட்டி இந்தியா இலங்கையில் மூக்கை நுழைப்பதற்கு முயற்சி செய்கிறது.
வட கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களும் 13 ஐ காரணமாக வைத்து தனிநாடு கோருகின்றனர்.
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை கேட்டு, உச்ச அதிகாரங்களை வழங்குமாறு அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது சிங்கள - பௌத்த நாடு, மகா சங்கத்தினரின் எதிர்ப்பும் வலுவடைந்துள்ள நிலையில், எதற்கு 13ம் திருத்தம்.
இந்தியாவின் வலியுறுத்தல்களுக்கு செவிசாய்க்காது அதனை இல்லாதொழிக்கும் செயல்பாட்டை செய்ய வேண்டும்.
ஆளுங்கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் உள்ள பெரும்பாலானவர்கள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை விரும்பவில்லை, ஆகவே நாடாளுமன்றத்தில் 22 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் இந்த 13 ம் திருத்தத்தை இல்லாமல் ஆக்க வேண்டும்.
இலங்கைக்கு சாபக்கேடான 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்று திரளவேண்டும்" என நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, சரத் வீரசேகர, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
