தமிழர் பகுதியில் நிகழ்ந்த துயரம் : 13 நாட்களேயான சிசு பரிதாப மரணம்
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka Police Investigation
By Sumithiran
பிறந்து 13 நாட்களேயான பெண்குழந்தை பால்புரைக்கேறியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் பால் கடந்த திங்கட்கிழமை (22) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குழந்தைக்கு மாலை வேளை, தாயார் பால் கொடுத்த போது பால் புரைக்கேறியநிலையில் உயிரிழந்துள்ளது.
தாயாரிடம் மேற்கொண்ட விசாரணையில்
இதனையடுத்து குழந்தையின் தாயாரிடம் மேற்கொண்ட விசாரணையில்,அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், குழந்தையின் சடலத்தை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்க
இந்த நிலையில் குழந்தை பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 2 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி