இன்று சில பகுதிகளுக்கு 13 மணி நேர நீர்வெட்டு
களனி மற்றும் கம்பஹா பகுதிகளில் 13 மணி நேர நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய இன்று (14.11.2026) காலை 8.30 மணி முதல் இரவு 10 மணி வரை நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின் விநியோகத்தை மேற்கொள்ளும் கட்டமைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகளே இதற்கு காரணமாகும்.
நீர் விநியோகம் தடை
பேலியகொடை, வத்தளை, மாபோல, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே மற்றும் ஜா-எல பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கட்டான, மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கும் நீர்வெட்டு நடைமுறையாகும்
இதனால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலைமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அத்துடன் நீரை சேமித்து அதனை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |