தென்னிலங்கையில் கைது செய்யப்பட்ட 13வயது சிறுமி..! தப்பியோடிய இளைஞன் : வெளியாகிய பின்னணி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Kiruththikan
காலியில் உந்துருளி திருட்டு சம்பவத்தில் 13 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் காலி – கிதுலாம்பிட்டிய சிறுவர் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்குமாறு காலி நீதவான் லக்மினி விதானகமகே நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய, அடுத்த மாதம் முதலாம் திகதி வரை சிறுமி அங்கு தடுத்து வைக்கப்படவுள்ளார்.
இளைஞன் தப்பியோட்டம்
காலி – யக்கலமுல்ல பிரதேசத்தில் உந்துருளி ஒன்றை திருடிக்கொண்டிருந்த சிறுமியும் மற்றுமொரு இளைஞனும் பிரதேசவாசிகளினால் பிடிக்கப்பட்டுள்ளதுடன், இளைஞன் தப்பியோடியுள்ளார்.
தப்பியோடிய சந்தேகநபர் சிறுமியின் தாயுடன் தொடர்பில் இருந்தமை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை யக்கலமுல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
