ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலையிடியான மர்ம குழு
கடந்த சில மாதங்களாக ஐக்கிய தேசியக் கட்சி என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி கட்டிதங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.
இந்த கடிதங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைப்பு, யானை சின்னம் மற்றும் கட்சித் தலைவர் வஜிர அபேவர்தனவின் கையொப்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்ட நடவடிக்கை
நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பற்றி தவறான புரிதலை உருவாக்கும் நோக்கில், சந்தேகத்துக்குரிய கடிதங்கள் ஒரு நாசகாரக் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
அதன்படி இவ்வாறான போலி கடிதங்களை தயாரிப்பவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
போலி அறிக்கைகள்
"தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்ட தன்னிச்சையான முடிவு குறித்து" என்ற தலைப்பில் ஒரு போலி அறிக்கை கடைசியாக வெளியிடப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் அறிக்கை முதலில் வட்ஸ்அப் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது விசாரணையின் போது தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜூன் 16 ஆம் திகதி “கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக” என்ற தலைப்பில் இதேபோன்ற போலி அறிக்கை சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாகவும் வஜிர கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
