அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை: அநுரவின் அடுத்தக் கட்ட நகர்வு
இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர் அலுவலகத்தின் (USTR) தூதுவர் ஜேமிசன் கிரியருக்கும்(Jamieson Greer) இடையில நேரடி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, நேற்று(25) பிற்பகல் இணையவழி மூலம் நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடலின் நோக்கம்
இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரிகளை குறைப்பது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவது, இந்தக் கலந்துரையாடலின் முதன்மை நோக்கமாகும்.
இந்த இணையவழி கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலக (USTR) அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
அமெரிக்கா ஆரம்பத்தில் இலங்கை மீது 44% பரஸ்பர வரியை விதித்தது, ஆனால் பின்னர் இந்த ஆண்டு ஓகஸ்ட் 01 முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் கட்டணத்தை 30% ஆகக் குறைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
