கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக போராட்டம் வெடிக்கும்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இந்திய கடற்றொழிலாளர்கள் தமது கடற்பரப்பை பயன்படுத்த எந்தச் சூழ் நிலையிலும் அனுமதியளிக்க முடியாது என கூறியுள்ள வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் முகமட் ஆலம், இவ்விடையன் குறித்து கடற்றொழில் அமைச்சர் அசமந்தமாக இருந்தால் அவருக்கெதிரான போராட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மன்னார் மற்றும் தீவகம் ஆகியவற்றின் கடற்றொழில் சமாசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த அவர் இவ்வாறு தெரிவுத்ததுடன் மேலும் கூறுகையில்
“நாட்டில் பெரும் பேசுபொருளாக இருக்கின்ற கரைவலை தொழில் நடைமுறைகள் தொடர்பில் குறிப்பாக தமிழகம் காரைக்காலில் இருந்து வருகின்ற எல்லைதாண்டும் படகுகள் தொடர்பில் நாம் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றோம்.
முற்றாக நிறுத்தப்பட வேண்டும்
அதன் பிரகாரம் அனைத்து மாவட்டங்களும் இணைந்து கலந்துரையாடியதன் அடிப்படையில் ஒரு முடிவுக்கு நாம் வந்துள்ளோம்.

இதேநேரம் ஜனாதிபதி செயலகம் முன் கரைவலை தொழிலை அனுமதிக்குமாறு கோரி சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை சிலர் செய்திருந்தனர்.
இதன்போது குறித்த தரப்பினரை சந்தித்த ஜனாதிபதி நாட்டிலுள்ள சட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியிருந்தார்.
இதன்போது சட்டத்தை மீறி அனுமதிக்கப்படாத ஒரு தொழிலை செய்ய அனுமதிபதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் அவர்களுக்கு விளக்கியிருந்தார்.
அதையே தான் நாங்களும் கூறுகின்றோம் எந்த தொழில் முறைகள், அரசால் தடுக்கப்பட்டிருக்கின்றதோ அந்த தொழில் முறைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்று.
ஏனையவர்களுக்கு பாதகமாக இருக்கும் என்பதை அறிந்துதான் கோரிக்கைக்கு இணங்க அரசு அதைச் சட்டமாக்கி இருக்கின்றது.
ஒரு சிலரின் தேவைக்காகவும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது என்பதற்காகவும் எந்த தடைசெய்யப்பட்ட தொழில் முறையும் ஏற்றுக்கொள் நாங்கள் இணங்கவில்லை” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |