கொரிய மொழி பரீட்சை - சித்தியடைந்தவர்களின் விபரம் வெளியானது
2022ஆம் ஆண்டுக்கான கொரிய மொழி விசேட பரீட்சையில் 1398 விண்ணப்பதாரர்கள் சித்தியடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவில் பணிபுரிய செல்லவுள்ள இலங்கையர்களுக்காக இந்தப் பரீட்சை நடைபெற்றது, அதன்படி 1652 விண்ணப்பதாரர்கள் இந்தப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.
நேர்முகத்தேர்வு
தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் நவம்பர் 09, 10, 11, 12 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது, மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள பணியகத்தின் கிளை அலுவலகத்திற்கு வந்து நேர்காணலில் பங்கேற்கலாம்.
இந்த விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவப் பரீட்சை நவம்பர் 03 ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளதுடன், நேர்முகத் தேர்வுகள், மருத்துவப் பரிசோதனையின் திகதிகள் மற்றும் காவல்துறை அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk ஐப் பார்வையிடுமாறு பணியகம் கோருகிறது.
தென் கொரியாவில் வேலை
2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையில் 4329 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளனர்.
