மட்டக்களப்பு ஐயன்கேணி கோயில்களுக்கு அருகே முஸ்லிம் கிராமங்களால் ஆக்கிரமிப்பு
நில ஆக்கிரமிப்பு குறித்த குற்றச்சாட்டுகள் பொதுவாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை போன்ற பகுதிகளில், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே நில உரிமை தொடர்பான பதற்றங்களாக வெளிப்படுகின்றன.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், தொன்மையான தமிழ் கிராமங்களால் நிரம்பிய பகுதிகளாக காணப்பட்டன.
இங்கு செழிப்பான பாரம்பரியம், கலாசாரம் மற்றும் சமூக அமைப்புகள் நிலைத்து வருகின்றன. ஆனால், சமீபகாலங்களில், பல்வேறு அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகள் இந்தக் கிராமங்களின் சமூக அமைப்பை மாற்றும் முயற்சிகளாக காட்சியளிக்கின்றன.
இஸ்லாமிய குடியேற்ற திட்டங்கள்
குறிப்பாக, இஸ்லாமிய குடியேற்ற திட்டங்கள் தமிழ் கிராமங்களுக்குள் ஊடுறுவும் நிலையை அடைந்துள்ளன என்பது பரவலாகவே பேசப்பட்டு வருகிறது.
இஸ்லாமிய குடியேற்றங்களை விரைவாக முன்னெடுக்கும் சில திட்டங்கள், அரசியல் ஆதரவைப் பெற்று செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் வைக்கின்றன.
இது, மக்கள் தொகை சீரமைப்பை நோக்கமாகக் கொண்ட ஒரு மறைமுக அரசியல் திட்டமாக இருக்கலாம் என்பதற்கான சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக அடையாளம் மற்றும் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். ஆனால், இஸ்லாமிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படும் பல பகுதிகளில், அரசு நிலங்கள் மற்றும் வனத்துறை பகுதிகள் புலப்படுத்தப்பட்டு தனிநபர் உரிமைகள் வழங்கப்படும் செயற்பாடுகள் காணப்படுகின்றன. இது உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தையும், சமூக கட்டமைப்பையும் பாதிக்கக்கூடிய ஒன்றாக மாறுகிறது.
இந்த வகையான திட்டங்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே சமூக பதற்றங்களை உருவாக்கக்கூடிய சூழலை உருவாக்குகின்றன. ஒற்றுமையை வளர்க்க வேண்டிய நேரத்தில், வெவ்வேறு மத சமூகங்களை ஒட்டுமொத்தமாக நடத்தாமல், தனித் தனியாக நிர்வாக மற்றும் அபிவிருத்தி திட்டங்களைச் செயல்படுத்துவது, பிளவுகளை அதிகரிக்கிறது.
காணி கொள்வனவு
இந்த நிலையில், மட்டக்களப்பு ஐயன்கேணி மணியபுரம் நாகபூசணி அம்மன் கோயில் மற்றும் ஐயன்கேணி நாகதம்பிரான் ஆலயம் ஆகிய இரண்டு கோயில்களுக்கு அருகில் சுமார் 50 M தூரத்தில் முஸ்லீம்களின் புதிய கிராமங்கள் அமையப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அரபு நாடுகளின் நிதி உதவியில் பெருந்தொகை நிதி கொடுத்து காணிகளை கொள்வனவு செய்து இஸ்லாமிய மதத்தை தழுவி கொள்ளும் குடும்பங்களுக்கு வீட்டு திட்டங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது
இன்னும் பத்து வருடங்களில் மேலும் பல தமிழ் கிராமங்களுக்குள் ஊடுறுவும் நோக்குடன் இஸ்லாமிய குடியேற்ற திட்டங்களை உருவாக்க முயற்சி செய்து வரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில் இப்போதைக்கு இருப்பது இந்த இரண்டு கோயில்கள் மாத்திரமே இந்த கோயில்களை அபிவிருத்தி செய்து மிகப்பெரிய சிலைகள் வளைவு கோபுரங்கள் அமைக்கப்படும் பட்சத்தில் தான் இஸ்லாமிய குடியேற்றங்களை தடுத்து நிறுத்த முடியும்.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எல்லை கிராமங்களில் இருக்கும் ஆலயங்களை புலம்பெயர் உறவுகள் பொறுப்பேற்று அதனை அபிவிருத்தி செய்யும் போது எமது பாரம்பரிய தமிழ் கிராமங்களை இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க முடியும் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மக்கள் சமூகத்தின் வாழ்வுரிமையை மதிக்க வேண்டும் என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால், தமிழ் கிராமங்களுக்குள் திட்டமிட்டு நடக்கும் குடியேற்ற நடவடிக்கைகள் ஒரு சமூக மாற்றத்தை நோக்கி திட்டமிடப்பட்ட முயற்சியாகவே தெரிகிறது.
இது தொடர்பான அரசியல் மற்றும் சமூக விளைவுகளை ஆராய்ந்து, சமநிலை மற்றும் நீதி அடிப்படையில் அணுகும் வகையான தீர்வுகள் தேவைப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
