12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் சிறப்புமிக்க ஆடி அமாவாசை
2026 ஆம் ஆண்டுக்கான ஆடி அமாவாசை இன்று (12) புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
12 ஆண்டுகளுக்குப் பின்னர் புதன்கிழமையில் ஆடி அமாவாசை தினம் வருவது, இந்த ஆண்டின் ஆடி அமாவாசை பக்தர்கள் மத்தியில் சிறப்புக் கவனத்தைப் பெற்றுள்ளது
இந்த ஆண்டின் ஆடி அமாவாசை தினத்துடன் சூரிய கிரகணமும் இடம்பெறுகிறது. ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், பிதிர்க்கடன் உள்ளிட்ட சடங்குகளை மேற்கொள்வது இந்து சமய மரபாகக் காணப்படுகிறது.
இன்று ஆடி அமாவாசை
எனினும், இன்றைய சூரிய கிரகணம் இலங்கையில் தென்படாது என்பதால், இலங்கையில் இன்று ஆடி அமாவாசை விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என இந்துக் குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் குறித்த சூரிய கிரகணம் தென்படுவதால், அங்கு ஆடி அமாவாசை தொடர்பான பிதிர்க்கடன், தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகள் நாளை (13) கடைப்பிடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள இந்து ஆலயங்கள் மற்றும் புனித நீர்நிலைகளில் முன்னோர்களை நினைவுகூர்ந்து சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
கிரகணம் ஏற்பட்டு, அது குறிப்பிட்ட பிரதேசத்தில் தென்படும் பட்சத்திலேயே மறுநாள் தர்ப்பணம் உள்ளிட்ட பிதிர்க்கடன்களை மேற்கொள்ள வேண்டும் என ஆகம மற்றும் சம்பிரதாய அடிப்படையில் கூறப்பட்டுள்ளதாகவும் இந்துக் குருமார் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |