நாமலையும் சாமரவையும் வெளியில் வைத்து ஆட்டத்தை ஆடுங்கள்! அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட சவால்
நாமலையும் சாமரவையும் வெளியில் வைத்து அரசியல் போட்டி ஆடுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறேன் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்களை உள்ளே வைத்துக்கொண்டு ஆடும் ஆட்டத்தால் எந்தப் பயனும் இல்லை எனவும் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் வரவு - செலவுத் திட்டம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
கிடைக்க வேண்டிய நிதி அதிகரிப்பு
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவுத் திட்டம் மக்களுக்கு வெற்று வாக்குறுதிகளை வழங்கும் ஒரு தென்னம் காசி(கடன்) வரவு - செலவுத் திட்டமாகும்.

இதன் மூலம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதி அதிகரிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே நடைமுறைக்கு வரும்.
ஆனால், அந்தக் காலப்பகுதி வரும்போது நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருக்கும்" என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |