ஆசிரியர்களின் போலி வேடம் கலைந்தது
வடமத்திய மாகாணத்தில் (north central province)போலியான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகல்களை சமர்ப்பித்து நியமனம் பெற்ற 14 பட்டதாரி மற்றும் பயிற்சி ஆசிரியர்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்தார்.
கடந்த 1997ஆம் ஆண்டு தொடக்கம் வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பணியாற்றுவதற்காக அவ்வப்போது ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 14 பட்டதாரி மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் சேவைகளே நிறுத்தப்பட்டுள்ளன.
எட்டு முதல் இருபத்தைந்து ஆண்டுகள் வரை பணியாற்றியவர்கள்
பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் எட்டு முதல் இருபத்தைந்து ஆண்டுகள் வரை பணியாற்றியவர்கள்.
ஆசிரியர்களாக சேவையில் சேரும் போது சமர்ப்பிக்கப்பட்ட சாதாரண தரம், உயர்தரம் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளதாக பிரதம அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்தார்.
வெளிநாடுகளில் படித்ததாக போலி பட்டச் சான்றிதழ்
இந்த ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணங்களைச் சரிபார்க்க மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில், பட்டதாரிகள் சிலர் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படித்ததாக போலியான பட்டச் சான்றிதழை சமர்ப்பித்துள்ளமை தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |