பிரான்ஸ் சுற்றுலா தம்பதிகளுக்கு யாழில் நேர்ந்த துயரம்!
யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவல்துறை நோக்கி இன்று (12)காலை பயணித்த பிரான்ஸ் நாட்டு சுற்றுலா தம்பதிகளின் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் அவர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் இருவர் வாடகை முச்சக்கர வண்டி ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவல்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாண பக்கம் திரும்பும்போது விபத்து
இதன்போது முச்சக்கர வண்டியானது மீண்டும் யாழ்ப்பாண பக்கம் நோக்கி திருப்புவதற்கு முயற்சித்தது. இந்த சந்தர்ப்பத்தில் பின்னால் வந்த கார் குறித்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து சம்பவித்தது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, பிரான்ஸ் தம்பதியினர் மற்றும் காரின் சாரதி என நால்வர் படுகாயம் அடைந்தனர். அத்துடன் முச்சக்கர வண்டி மற்றும் கார் என்பன பலத்த சேதங்களுக்கு உள்ளாகின.
படுகாயம் அடைந்த நால்வரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து சம்பவம் குறித்து ஊர்காவல்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |