விடுதியில் தங்கி படித்த 14 வயது மாணவி பெற்றெடுத்த ஆண்குழந்தை : அதிர்ச்சியில் நிர்வாகம்
பாடசாலையில் உள்ள விடுதியில் தங்கி கற்றல் செயற்பாட்டை மேற்கொண்டு வந்த 9ம் வகுப்பு மாணவி கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் துமகூரு பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம்இடம்பெற்றுள்ளது.
வயிற்று வலியால் கடும் அவதி
அங்குள்ள அரச பாடசாலை விடுதியில் தங்கி சிறுமி 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அண்மையில் சிறுமி வயிற்று வலியால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளார். உடனடியாக அவரை சிக்பள்ளாபூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அப்போது சிறுமி முழுமாத கர்ப்பமாக இருப்பதாகவும், பிரசவ வலியால் துடிப்பதாகவும் வைத்தியர்கள் கூறியது விடுதி நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த சிறுமி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் விசாரணை
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியிடம் விசாரித்தபோது அவர் கர்ப்பத்திற்கு யார் காரணம் என கூறவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணைகளை தொடங்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |